நட்பிற்கும் உண்டோ அடைகுந்தாழ்
July 22, 2013
கடனாளி ஆகின்றேன் அதைவாங்க
என்றும் பின்வருவாய் என்றால்,
மரணத்தை ஏற்கின்றேன் மறுஜென்மம்
முழுதும் உன்னுடனே என்றால்,
வீண்பழிகள் போடுகிறேன் பழிதீர்க்க
எந்தன் பின்தொடர்வாய் என்றால்,
எதிர்பார்ப்பு பிரியப் பார்க்கிறேன் என்றும்
போலவே எதிராய்செய்வாய் என்றால்,
அகங்காரம் பிடித்தவன் ஆகின்றேன்அதை
அடக்க நீயேவருவாய் என்றால்,
எந்தன் நட்பிற்கு எதிரிகளான அத்தனையும்
ஏதோவொரு வழியில் நண்பனாய் இருக்க
நட்பிற்கும் உண்டோ அடைகுந்தாழ்!